Tamilnadu
ரூ.167 கோடி - அண்ணாமலை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? : ஆர்.எஸ்.பாரதி கேள்வி!
சமூக நீதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து சென்னையில் தி.மு.க மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,கழக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன், எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ,திராவிடர் கழக துணை பொது செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,"நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலில் தி.மு.கதான் வலியுறுத்தியது. தற்போது நாடே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இன்று கூட நடிகர் விஜய் நீட் விலக்கு தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்ப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ”ரூ.167 கோடி சுங்கச்சாவடியில் சிக்கியுள்ளது. இதில் தொடர்புடைய நபருடன் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருப்பது போன்ற படங்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை. கடத்தல் குற்றவாளியுடன் மோடிக்கு தொடர்பு இருக்கிறது என்று நாங்கள் சொல்லலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !