Tamilnadu
38 அரசு பள்ளிகளில் Robotics Lab உருவாக்கப்படும் : பேரவையில் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. ரூ.58 கோடியில் 1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
2. ரூ,2.32 கோடியில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
3. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கற்றுக் கொடுக்கப்படும்.
4.38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (Robotics Lab) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.
5. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6. மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தகைசால் நிறுவனமாக ரூ.41.63 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
7. அண்ணா நூற்றாண்டு நூகலத்தில் ரூ.80.24 லட்சம் மதிப்பில் சிறார் அறிவியல் பூங்கா நிறுவப்படும்.
8. திசைதோறும் திராவிடம் என்ற திட்டம் ரூ.2 கோடியில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் விரிவாக்கப்படும்.
9. தமிழ்நாட்டின் பண்பாட்டு புகைப்பட ஓவிய நூல்கள் ரூ.50 லட்சம் மதிப்பில் மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் வெளியிடப்படும்.
10. ரூ.20 லட்சம் மதிப்பில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை இணைய வழியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவுபடுத்தப்படும்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!