Tamilnadu
உயர்கல்வித்துறை : 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் க.பொன்முடி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உயர்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் பொன்முடி 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1. அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
2.கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டம் ரூ.21 கோடியில் கட்டப்படும்.
3. ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் ரூ.14 கோடியில் கட்டப்படும்.
4 சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் ரூ.21 கோடியில் கட்டப்படும்.
5. அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் பயிலும் மாணவர்களுக்கு தனி ஓய்வறை ஒன்று தலா ரூ. 5 லட்சம் வீதம் 171 அரசு கல்லூரிகளில் ரூ.8.55 கோடியில் கட்டப்படும்.
6.கோயம்பத்தூர், சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரணியல் ஆய்வகம் ரூ.3 கோடியில் நிறுவப்படும்.
7.திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சாரம் வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூ.3 கோடியில் நிறுவப்படம்.
8.காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூ.2 கோடியில் நிறுவப்படும்.
9.வேலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் ரூ.3 கோடியில் நிறுவப்படும்.
10.GATE,IES,CAT,GMAT,GRE,IELTS மற்றும் TOEFL உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1400 ஆகி உயர்த்தப்படும். இதற்கு ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
11. அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.2 கோடியில் அளிக்கப்படும்.
12. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் ரூ.7.05 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.
13.தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீளுருவாக்கம் செய்யப்படும்.
14.திருச்சிராப்பள்ளி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.
15.கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!