Tamilnadu

”பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது” : டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையானது மக்கள் பிரச்னைகளை குறிப்பிட்டு எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் இதனை ஜூம்லா அறிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருவதோடு, மக்களை மேலும் முட்டாளாக்கும் அறிக்கை என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என தி.மு.க செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.எஸ் இளங்கோவன், "கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள எதையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.ஒரே நாடு, ஒரே தேர்தல், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கும் செயல். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற பா.ஜ.க.வின் கனவை, அவர்களின் தேர்தல் அறிக்கையே தகர்த்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: அரசியல் சாசனமே பாஜகவின் முக்கிய குறி... மீண்டும் அம்பலமான பாஜகவின் உண்மை முகம் !