Tamilnadu
பழனி அரசு பள்ளியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்: பாஜக மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார் !
பாஜகவில் நீண்ட காலமாகவே ரௌடிகளையும், குற்றப்பின்னணி கொண்டவர்களையும் தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. மேலும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.
இந்தியாவுக்கு பெருமைதேடித்தந்த மல்யுத்த வீராங்களைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் மீது கூட பாஜக இன்னும் நடவடிக்கை எடுக்காததால் இருந்தே இந்த உண்மை புரியும். இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்த்த பாஜக மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளத
பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் இன்று பணியில் இருந்த போது புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள மகுடீஸ்வரன் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்யச் சென்றுள்ளார்.
மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் காலை உணவு திட்ட பொறுப்பாளரை மிரட்டியதுடன், பாலியல் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியுள்ளார். மகுடீஸ்வரன் இடமிருந்து மீண்டு வந்த அந்த பெண் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தகவல் அறிந்து பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தலைமறைவாகியுள்ளார். போலீசார் மகுடீஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!