Tamilnadu
’அ.தி.மு.க ஓட்டுக்குப் பணம் கொடுங்கள்’ : கள்ளக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் பேச்சால் சர்ச்சை!
தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார்கள். மேலும் தி.மு.க தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஆத்தூரில் நடைபெற்றது. இதில் பேசிய வேட்பாளர் குமரகுரு, "அ.தி.மு.கவுக்கு யார் ஓட்டுப் போடுவார்களோ அவர்களுக்கு மட்டும் பணம் கொடுங்கள். மற்ற யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என பேசியது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பூத் அமைந்துள்ள பகுதியில் மட்டும் வாக்கு சேகரியுங்கள். வெளியில் சென்று ஒன்றும் கிழிக்க வேண்டாம் என வேட்பாளர் குமரகுரு பேசியது அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஓட்டுக்குப் பணம் கொடுங்கள் என பேசிய அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!