Tamilnadu
தோல்வியை தழுவிய பாஜகவின் ABVP அமைப்பு: “இது வரும் தேர்தலுக்கான டிரெய்லர்தான்” - அமைச்சர் மனோ தங்கராஜ்!
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஆண்டுதோறும் மாணவர் பேரவை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு தேர்தல் நடைபெறாமல் இருந்துள்ளது. நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு, கடந்த 22 ஆம் தேதி மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி மாணவர் அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம் (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) உள்ளிட்ட அமைப்புகளும், பாஜகவின் வலதுசாரி மாணவர் அமைப்பான ABVP போன்ற அமைப்புகளும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு போட்டிகள் நடைபெற்ற நிலையில், நேற்று (24.03.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் இடதுசாரி மாணவர் அணிகள் மகத்தான வெற்றியை பெற்றது. இதில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தனஞ்சய் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இடதுசாரி அமைப்புகளிடம் வழக்கம்போல் பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP மண்ணை கவ்விய நிலையில், மாணவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மேலும் இடதுசாரி மாணவ அமைப்புகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த மாணவர் தேர்தல் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டமாக பாராக்கப்படுகிறது.
நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர். வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது.
இதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!