Tamilnadu
காப்பீடு பணத்திற்காக தாயை கொன்ற மகன் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் படேக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹிமான்சு. இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த விளையாட்டிற்காக நண்பர்களிடம் 4 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால் அனைத்து பணத்தையும் இழந்துள்ளார்.
இதையடுத்து கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத இருந்த ஹிமான்சுக்கு மோசமான யோசனை தோன்றியது. சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் நகை திருடி அதில் கிடைத்த பணத்தைத் தனது பெற்றோருக்கு ரூ.50 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு வாங்கியுள்ளார் ஹிமான்சு.
இந்த பணத்தைப் பெறுவதற்காகப் பெற்ற தாயைக் கொலை செய்து யமுனை ஆற்றின் கரையில் உடலை வீசியுள்ளார். இந்த கொடூர சம்பவம் வெளியே வந்ததை அடுத்து ஹிமான்சுவை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!