Tamilnadu
தமிழ்நாட்டில் 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்குத் தடை : ஏன்? என்ன காரணம்?
வீடுகளில் நாய் வளர்ப்பது இயல்பான ஒன்று. முன்பு எல்லாம் அதிகமாக நாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு வகை நாய்களை பலர் வளர்க்கிறார்கள்.இப்படி வெளிநாட்டு நாய்கள் நமது நாட்டின் சீதோஷ்ண நிலைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல பிரச்சனைகளை வந்தித்து வருகிறது. மேலும் இது நாய்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில்தான் இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்திற்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. மேலும் அரசு வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கையில்,
1.Basset hound
2.French Bulldog
3.Alaskan Malamute
4.Keeshond
5.Newfoundland
6.Norwegian Elkhound
7.Tibetan Mastiff
8.Siberian Husky
9.Saint Bernard
ஆகிய 9 வகை வெளிநாட்டு வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து நாய் வளர்ப்பார்களும் பொறுப்பான இனப்பெருக்க நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் நாய்களின் உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (TNAWB) இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான சான்றிதழை வழங்கும். நாய்கள் வளர்ப்பவர்கள், இனப்பெருக்கம் செய்யப்படும் குறிப்பிட்ட இனம் குறித்து TNAWBல் பதிவு செய்ய வேண்டும்.
இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் நாய்களை, கால்நடை மருத்துவரிடம் முன் உடல் நலம் பரிசோதிக்க வேண்டும் என வரைவுக் கொள்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !