Tamilnadu

மேலும் 8 இடங்களில் அகழாய்வு : தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிதிநிலை அறிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து பிப். 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து இன்று 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும்:

மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் நூலகங்களில் இடம் பெறுவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கீழகடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு. நாட்டிலேயே அகழாய்வுக்கு அதிகத் தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு. கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு:

கலைரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030க்குள் குடிசையில்லாத் தமிழ்நாடு மாற்றப்படும். 6 ஆண்டகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள். 2024 -25ல் ஒரு லட்சம் வீடுகள். ஒருவீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சம் ஆகும்.

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கு ரூ.365 கோடி ஒதுக்கீடு.

5000 ஏரிகள், குளங்கள் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு. 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை : முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!