Tamilnadu
மாபெரும் 7 தமிழ்கனவுகள்: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம்பெறும் 7 முக்கிய அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட உள்ளது. இந்நிலையில், “தடைகளைத் தாண்டி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம்! மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம்! தொழில்துறையில் முன்னணி மாநிலம்! இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம்! வேளாண்மையில் முன்னணி மாநிலம்! விளையாட்டுத் துறையில், இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் – என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.
தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்” எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், ”தமிழ்நாடு அரசு நாளை தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில்,
1. சமூக நீதி,
2. கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு,
3. உலகை வெல்லும் இளைய தமிழகம்,
4. அறிவுசார் பொருளாதாரம்,
5. சமத்துவ நோக்கில் மகளிர் நலம்,
6. பசுமை வழிப் பயணம்,
7. தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்” ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறுகிறது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாட்டு மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
Also Read
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!