Tamilnadu
”என் வீட்டு கதவை அமலாக்கத்துறைக்காக திறந்தே வச்சுருக்கேன்” : அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் காங்கேய நல்லூர் கிராமம் முதல் பாலாற்றில் இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாயை ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைக்கும் பணி துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள், "வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டின் கதவை அமலாக்கத்துறை விரைவில் தட்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், எங்கள் வீட்டு கதவை அமலாக்கத்துறை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் கூட அவர்களுக்கு வேண்டாம். நான் அவர்களுக்காக எங்கள் வீட்டுக் கதவைத் திறந்தே வைத்திருக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் அண்ணாமலை என்ன பொருளாதார அறிஞரா?. தமிழ்நாடு எல்லாத்துறைகளிலும் முன்னேறிதான் இருக்கிறது. பெரிய பெரிய வல்லுநர்களே திராவிட மாடல் அரசுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் கொடுத்துள்ளார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !
-
"ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சரியானது அல்ல" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா !
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!