Tamilnadu
பள்ளிவாசல் திறப்பு விழா - சீர்வரிசை எடுத்து வந்த இந்துக்கள் : மத நல்லிணக்க மாநிலம் தமிழ்நாடு!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் நேற்று திறக்கப்பட்டது. இவ்விழாவை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அக்கிராமத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதோடு இந்த விழாவை வரவேற்று ஊர் முழுவதும் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அனைத்து மதத்தினரும் பேனர்கள் வைத்துள்ளனர். மேலும் இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை பாக்கு ஆகியவற்றைச் சீர்வரிசையாகப் பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர்.
அதேபோல் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளியுடன் பழங்களைச் சீர்வரிசையாகக் கொண்டுச் சென்றனர். சீர் வரிசை கொண்டு வந்த அப்போது பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில் இரு மதத்தினரையும் வரவேற்றார். அப்போது அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் ஆரதழுவி அனைவரையும் வரவேற்றனர். பிறகு அனைவரும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இன்று பாமர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி இருக்கும் நிலையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை எடுத்து வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு மத நல்லிணக்க மாநிலமாக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !