Tamilnadu
தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது : கழக கொடியை ஏற்றிவைத்தார் கனிமொழி MP!
தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்கியது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றே சேலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு மாநாட்டுத் திடலுக்கு வருகை சந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அப்போது விண்ணைப் பிளக்க வாழ்த்து முழக்கங்கள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க இளைஞர் அணியின் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க இளைஞரணியின் மாநாட்டுத் தீப ஒளி சுடரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பிறகு மாநாடு திடலில் இந்த தீப ஒளி சுடர் ஏற்றப்பட்டது.
பின்னர் தி.மு.க இளைஞரணியின் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி 13 நாட்கள் 8647 கிலோ மீட்டர் பயணித்து இன்று சேலம் மாநாட்டுத் திடலுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தி.மு.க இயக்கத்தின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை அடுத்து திராவிட இயக்கத்தின் வரலாற்றை மெய்சிலிர்க்க வைத்த ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1500 ட்ரோன்கள் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் வானில் ஜொலித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இதையடுத்து இன்று மிக பிரம்மாண்டமாக மாநாட்டின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. இந்நிகழவில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் மாநாட்டு திடலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்தார். முன்னதாக திடலில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
Also Read
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!