Tamilnadu
தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு : திராவிட இயக்கத்தின் வரலாறு - மெய்சிலிர்க்க வைத்த ட்ரோன் கண்காட்சி!
தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தி.மு.க இளைஞர் அணியின் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. அதில், திராவிட இயக்கத்தின் வரலாற்றை மெய்சிலிர்க்க வைத்த ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1500 ட்ரோன்கள் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் வானில் ஜொலித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!