Tamilnadu
உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல் நாளிலேயே இலக்கை எட்டி சாதனை.. ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு !
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் (7,8.01.2024) ஆகிய 2 நாட்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் முதல் நாளில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியது.
இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல் நாளே நிர்ணயிக்கப்பட்ட 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளதாகவும், முன்னணி நிறுவனங்களோடு 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன எனவும் தொழில்துறை செயலாளர் அருண்ராய் கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.43 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இன்று நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளே அதன் இலக்கான 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!