Tamilnadu

முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்.. ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை: நெகிழ்ச்சி சம்பவம்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

அதேபோல் நேற்றிலிருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து சென்னையை வேக வேகமாக மீட்டு வருகிறார்கள். இவர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பல்வேறு பகுதிகள் இயல்வு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் போக்குவரத்தும் வழக்கம்போல் இயக்கி வருகிறது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கந்தன்சாவடி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி ஆய்வு செய்தார். மேலும் தரமணி, பாரதிநகர் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். பிறகு அங்குப் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண பணிக்கு செல்லும் போது, தேனாம்பேட்டை அம்புஜம்மாள் தெருவைச் சேர்ந்த ரம்யா என்ற பெண், தங்கள் பகுதியில் மூன்று நாட்களாகத் தண்ணீர் தேங்குவதால் அவதிப்படுவதாகவும், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து அவர் கோரிக்கை வைத்த ஒரு மணிநேரத்திலேயே சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தலைமையில் அப்பகுதியிலிருந்த மழைநீர் அகற்றப்பட்டது. மேலும் சாலையிலிருந்த குப்பைகளும் உடனுக்குடன் அகற்றப்பட்டது.

பின்னர் தனது கோரிக்கையை ஒரு மணிநேரத்திலேயே நிறைவேற்றிக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ரம்யா நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கான அரசாக இந்த அரசு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read: இரண்டாவது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் - சென்னையை மீட்கும் தி.மு.க அரசு!