Tamilnadu
“கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள்” : களத்தில் இறங்கிய திமுக இளைஞரணி - அமைச்சர் உதயநிதி!
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில், மாநிலம் முழுவதும் இரு சக்கர வாகன பேரணி இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 8,647 கி.மீ. தூரம் சுமார் 13 நாட்கள் வரை இந்த பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.
மாநில உரிமைகளை மீட்க கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நவ.15 (இன்று) முதல் 27 வரை நடைபெறும் இந்த பேரணியானது 188 இருசக்கர வாகனங்கள், 504 பிரச்சார மையங்கள் என தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலிலும் நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி வள்ளுவர் சிலை அருகே இன்று இந்த பேரணியை இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
234 சட்டமன்ற தொகுதிகளையும் வள்ளுவர் மண்டலம், பெரியார் மண்டலம், அண்ணா மண்டலம், கலைஞர் மண்டலம் நான்காக பிரித்து இப்பேரணி நடைபெறுகிறது. பொதுமக்களிடம் கழக சாதனைகளை பற்றியும், மாநில உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கும் வகையில் இந்த பேரணி இன்று துவங்கியது. காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஸேவை தூக்கிலிடப்பட்ட இந்த நாளில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வை குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்!
மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட DMK riders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.
13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!