Tamilnadu
பெற்றோர்களே உஷார் : தண்ணீர் கூடையில் விழுந்த 10 மாத பெண் குழந்தைக்கு நடந்த விபரீதம்!
சென்னை வில்லிவாக்கம் ஜெகநாதன் நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மேரி என்ற மனைவியும் 4 வயதில் நைனிகா என்ற மகளும், ரிஷிகா என்ற 10 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், ரவிக்குமார் நேற்று காலை வழக்கம் போல ஆட்டோ ஓட்டுவதற்காக வெளியே சென்று விட்டார். அப்போது அவரது மனைவி மேரி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு சிறிது நேரம் கழித்து மேரி எழுந்து பார்த்தபோது 10 மாத குழந்தை ரிஷிகா அருகே இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு வீடு முழுவதும் தேடி பார்த்தபோது, கழிவறையிலிருந்த பெரிய தண்ணீர் பாத்திரத்திற்குள் பேச்சு மூச்சற்று குழந்தை இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.
இவரது சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்துபார்த்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரிய தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!