Tamilnadu
மாரடைப்பால் காலமானார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் : பக்தர்கள் அதிர்ச்சி !
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது மேல்மருவத்தூர். இங்கு பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், அதன் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்தவர் ஆவார்.
அந்த கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்ட இவரது ஆன்மீக சேவையை பாராட்டி, 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. ஆன்மீகத்தின் அடையாளமாக காணப்படும் இவருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், ஜிபி செந்தில், ஜிபி அன்பழகன் என்ற மகன்களும் உள்ளனர்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் முறையை மட்டுமின்றி, மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையையும் கொண்டு வந்து, ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டினார். இதனாலே இந்த கோயிலுக்கு நாள்தோறும் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
சபரிமலைக்கு எப்படி ஆண் பக்தர்கள் விரதம் இருந்து மாலை போட்டு வழிபடுவாரோ, அதே போல் இந்த கோயிலுக்கு பெண் பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து மாலை போட்டு கோயிலுக்கு ஆண்டுதோறும் சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இவர் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இதற்காக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்த சூழலில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு தனது இல்லத்தில் உயிரிழந்தார். தனது 82-வது வயதில் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவு பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!
-
ஜானகி vs கேரளா ஸ்டேட்: முடிவுக்கு வந்த பிரச்சினை- தணிக்கை குழுவின் கோரிக்கை ஏற்பு- புதிய படத்தலைப்பு என்ன
-
“மாணவர்கள் கோட்சே வழியில் சென்று விடக்கூடாது” : கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வாக்காளர்களை நீக்க பாஜக சதி - இது பீகார் பிரச்சினை அல்ல; இந்தியாவின் பிரச்சினை” : முரசொலி தலையங்கம்!