Tamilnadu
"சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர்" : மகளிர் உரிமை மாநாட்டில் தலைவர்கள் புகழாரம்!
தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை யொட்டி, தி.மு.க மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா ,ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், பீகார் அமைச்சர் லெஷி சிங் உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் ராக்கி பிட்லன், “பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து நாம் போராட வேண்டியுள்ளது.
பல்வேறு தளங்களிலும் பெண்கள் தடைகளை உடைத்து இன்று முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், “இந்தியாவிலேயே பெண்களுக்காக பல முன்னேற்றத் திட்டங்களை அதிகளவில் கொண்டுவந்த தலைவர்தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். மகளிருக்கு இட ஒதுக்கீடு, சொத்துரிமை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை பெண்களுக்காகவே தீட்டியவர் கலைஞர் மட்டும்தான். தமிழ்நாட்டில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர், சமூக நீதி, சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்பதை இங்கிருக்கும் அனைவரும் அறிவோம். அன்றிலிருந்து இன்றுவரை நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டின் திமுக அரசு முன்னணியில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பீகார் அமைச்சர் லெஷி சிங் பேசும் போது, "தி.மு.கவில் மகளிரணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல் படுத்தும் நோக்கத்தில் மோடி அரசு கொண்டு வரவில்லை" என கூறினார்.
Also Read
-
‘நான் இந்தியன்’ : சீனர் என நினைத்து திரிபுரா இளைஞர் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!
-
ரூ.18.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணைமின் நிலையம்... திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கட்டடக் கலையைப் போற்றும் திராவிட மாடல் அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கலை உள்ளம்!
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!