Tamilnadu

200 வழக்குள்.. ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவிற்கு மாநில பொறுப்பு வழங்கிய பா.ஜ.க : மக்கள் அதிர்ச்சி!

அகில இந்திய அளவிலே ரவுடிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க கட்சி. தேடப்படும் கொலை-கொள்ளை குற்றவாளிகள் தங்களை போலிஸாரிடம் சிக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்காக பா.ஜ.க கட்சியில் சேர்கின்றனர். இவர்களுக்கும் பா.ஜ.க அடைக்கலம் கொடுத்து கட்சியில் சேர்த்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில், தற்போது ஒன்றிய அமைச்சராக இருக்கும் எல்.முருகன் தலைவராக இருந்தபோது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள வண்டலூரில் ரெட்ஹில்ஸ் சூர்யா பா.ஜ.கவில் இணைந்தார். அதேபோல் புளிந்தோப்பு அஞ்சலை, புதுவை எழிலரசி, புதுசை சோழன், சேலம் முரளி, குரங்கு ஆனந்த், பூண்டு மதன், புதுவை விக்கி என பல குற்றவாளிகள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் வரிசையில் நெடுங்குன்றம் சூர்யாவும் பா.ஜ.கவில் இணைந்தார். இவர் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் அவரை பா.ஜ.க தனது கட்சியில் சேர்த்துக் கொண்டு அடைக்கலம் கொடுத்து வருகிறது. தற்போது இந்த குற்றவாளிக்கு பா.ஜ.க கட்சியில் பட்டியலின மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதவி வழங்கியதை அடுத்து பேட்டி கொடுத்த நெடுங்குன்றம் சூர்யா, "பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையில் செயல்பாடுகளை பார்த்து பின்னர்தான் நான் பா.ஜ.கவில் இணைந்தேன். என் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதில் சில வழக்குகள் சட்டப்படி முடிந்துவிட்டது. மீதமுள்ள வழக்குகளை சட்டப்படி அணுகுவேன்" என தெரிவித்துள்ளார். இவரது மனைவிக்கும் பா.ஜ.க மாவட்ட மகளிர் அணித் தலைவி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புகாரளிக்க வந்த தலித் பெண்.. மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்- உ.பியில் அதிர்ச்சி!