Tamilnadu
”மக்களுடன் ஸ்டாலின்” : தி.மு.க முப்பெரும் விழாவில் செயலி வெளியீடு : அதன் 5 முக்கிய சிறப்பம்சங்கள் இதோ!
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா, தி.மு.க. பவள விழா மற்றும் தி.மு.க. முப்பெரும் விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்குப் பெரியார் விருது, மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கு அண்ணா விருது, அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்குக் கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்குப் பாவேந்தர் விருது,பெங்களூர் ந.இராமசாமி அவர்களுக்குப் பேராசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
மேலும் மூத்தமுன்னோடுகளுக்கு பொற்கிழிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்த முப்பெரும் விழாவில் "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செலியை வெளியிட்டார்.
இந்த செயலியில், தி.மு.க அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் தி.மு.க அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் விரிவாக இடம் பெற்றுள்ளது. அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்து கொள்ளவும் முடியும்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!