Tamilnadu
9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. பா.ஜ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!
சென்னை அடுத்து மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "தனது 9 வயது மகள் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாகச் சோர்வாக இருந்தார். இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, பள்ளிக்குத் தினமும் வேனில் அழைத்துச் செல்லும் ஓட்டுநர் மாமா 'பேட் டச்' செய்ததாகக் கூறியதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
அதைத் தொடர்ந்து வேன் ஓட்டுநரை நாங்கள் மறைமுகமாகக் கண்காணித்தபோது சிறுமிகளிடம் அவர் பாலியல் சீண்டல் செய்தது உறுதியானது. எங்களிடம் வீடியோ ஆதாரமும் உள்ளது." என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து பள்ளி வேன் ஓட்டுநரான ரமேஷை போலிஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும் பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பா.ஜ.கவின் அம்பத்தூர் 90வது வார்டு தலைவராக இருப்பதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. பள்ளி சிறுமிகளுக்கு பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொந்தரவு செய்தது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!