Tamilnadu
கார் ஓட்ட கற்றுக்கொடுத்த தம்பி.. தலைகுப்புற ஆற்றில் கவிழ்ந்த கார்: அக்காக்கு நடந்த துயரம்!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி. இந்நிலையில் சில நாட்களாகச் சுபாங்கிக்கு அவரது சகோதரர் நாம்தேவ் கார் ஓட்ட பயிற்சி அளித்து வந்துள்ளார்.
அதன்படி இன்றும் இருவரும் வழக்கம்போல் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது கார் பிச்சாரவம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து வடிகால் ஆற்றில் தலைகுப்புற விழுந்தது.
பின்னர் கார் நீரில் மூழ்கியது. இருவரும் காரில் இருந்து வெளியே வர முயன்றனர். ஆனால் நாம்தேவால் மட்டுமே காரில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த விபத்து பற்றி அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் போலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மூழ்கிய காரை வெளியே எடுத்தனர். இதில் சுபாங்கி இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி கார் ஓட்ட பயிற்சி கொடுத்தபோது கார் ஆற்றில் மூழ்கிய அக்கா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!