Tamilnadu
“சனாதனம் நம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை..” : சனாதன ஒழிப்பு மாநாட்டில் கி.வீரமணி பேச்சு !
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் மக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சனாதன ஒழிப்பு கூட்டணியை ஒருங்கிணைத்து கலாச்சார செயல்பாடாக, அறிவியல் செயல்பாடாக இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் பேசியது பின்வருமாறு :
"இன்று இந்தியாவின், தமிழ்நாட்டின் வரலாற்று பொன்நாள். இந்தியாவுக்கே, உலகத்துக்கே வழிகாட்டக் கூடிய செயல்பாடு. மனிதத்திற்கு விரோதமானது சனாதானம். எனவேதான் இந்த மாநாடு உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய மாநாடு என்று கூறுகிறேன்.ரோகினி போன்ற முற்போக்கு கருத்தாளர்கள் இருப்பது அபூர்வமானது. அமைச்சர் சேகர்பாபு செல்போனில் ரோகினி பெயரை பதிவு செய்த போது சிபிஎம் என வந்தது அதுதான் அவருக்கான அடையாளம்.
சனாதான ஒழிப்பு மாநாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு காவி வேட்டியில் வந்துள்ளார். எங்களுக்கு எந்த நிறத்தின் மீதோ தனிநபர் மீதோ வெறுப்பு கிடையாது. இந்த மாநாடு சனாதன எதிர்ப்பு மாநாடாக இல்லாமல் சனாதான ஒழிப்பு மாநாடாக நடைபெறுவது சிறப்பானது.
ஒரே நாடு, ஒரே மொழி, கலாச்சாரம், தேர்தல், குடும்ப அட்டை என நிறுவுபவர்களுக்கு ஏன் ஒரே மதம், ஒரே சாதி என்று கூற மனம் வரவில்லை. ஏனென்றால் உங்களுடைய இனம் குறுக்கே நிற்கிறது. உங்களை இயக்குவது சனாதானம் என்கிற இந்துத்துவம். இப்போது பல தேர்தல் நடைபெறுவதால் செலவு அதிகரிப்பதாக கூறுகின்றனர். பின்வரும் காலங்களில் தேர்தலை வேண்டாம் செலவு உள்ளதாக கூறுவர். அவ்வாறு சனாதானத்தை நிறுவ முயற்சிக்கின்றனர்.
சனாதனம் என்பது உழைக்கும் மக்களுக்காகவா? ஆளுநராக உள்ளவர் அரசியல் சட்டத்தை, உறுதிமொழியை பற்றி கவலைப்படாமல் சனாதானத்தை பெருக்க வேண்டும் என கூறுகிறார். நாங்கள் ஆதாரத்துடன் பேசுபவர்கள். அவர்களைப் போல் கயிறு திரிப்பவர்கள் அல்ல. சனாதானத்திற்கு மூலாதாரம் வேதங்களை கொண்டது. இதற்கு ஆரிய மதம் என்று பெயர்.
சனாதனம் நம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை. ஆரியத்திற்கு மேன்மை பொருந்தியது என பொருள். இந்து மதமும் சனாதானம் என்பது வெவ்வேறு அல்ல. சனாதானத்திற்கு எதிராக பேசிய வள்ளலாரை சனாதானத்தின் உச்சம் என ஆளுநர் கூறுகிறார். மக்கள் அனைவரும் சமம். அனைவருக்கும் வாய்ப்பு சமமாக அமைய வேண்டும். ரிஷிகளுக்கு ராக்கெட் என்றால் என்ன வேண்டும் என தெரியுமா? பகுத்தறிவு மூலமே ஒலிப்பெருக்கிகள், ராக்கெட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். சனாதனம் என்றால் மாறாதது என கூறுபவர்கள் ரஃபேலுக்கு பதிலாக ராமரின் ஆயுதத்தை பயன்படுத்தாமலே. சிக்கனமாக இருக்கும் பிரதமர் ஏன் விமானத்தில் பயணிக்க வேண்டும்?
சனதானம் சமத்துவத்திற்காகவே அழிக்கப்பட வேண்டும். நீட் தேர்வு போன்றவற்றின் மூலம் படிப்பை தடுக்கின்றனர். விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் மயக்க பிஸ்கட்டுகள் அளித்து பணத்தை திருடுவது போல பாசாங்கு செய்து ஏமாற்றி நிதியுதவி இல்லாமல் கடனுதவி அளிக்கின்றனர். விஷ்வகர்மா திட்டத்தில் 18 தொழில்களை மேற்கொள்ள கூறி பழக்குகின்றனர். இது ஆபத்தானது.
சனாதன ஒழிப்பு மாநாடு சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அரசியல் செயல்பாடாக மும்பையில் இந்தியா கூட்டணி சந்திப்பு நடந்துள்ளது. 6 மாதத்தில் கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். சனாதன ஒழிப்பு கூட்டணியை ஒருங்கிணைத்து கலாச்சார செயல்பாடாக, அறிவியல் செயல்பாடாக இருக்க வேண்டும். அடுத்த தேர்தலை விட நாம் அடுத்த தலைமுறைதான் முக்கியம். போருக்கு தயாராவது போல் ஆயுதங்களுடன் நாம் தயாராக இருக்க வேண்டும். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களை ஆயுதங்களாக்கி இளையோர்களை அதனை பழக்க வேண்டும்"
Also Read
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!