Tamilnadu

“திராவிட மாடல் ஆட்சியில் 922 கோயில்களில் குடமுழுக்கு.. 5335 ஏக்கர் நிலம் மீட்பு”: அமைச்சர் அதிரடி பேச்சு!

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் மலை கோயில்களில் பக்தர்கள், முதியவர்கள், நடக்க முடியாதவர்கள் வசதிக்காக ரோப்கார், தானியங்கி லிப்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி , இன்று கோவை அனுவாவி சுப்பிரமணிய கோயிலில் ரோப் கார் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டது.

560 படிகள் கொண்ட முருகன், சிவன் இருக்கும் இந்த கோயிலில் ரூ.13 கோடி மதிப்பில் 460மீ அளவுள்ள ரோப் கார் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கு தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தினர் கள ஆய்வு செய்து ரோப் கார் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!

அந்த அறிக்கை கிடைத்தவுடன் ரோப் கார் அமைக்கும் பணிகள் நடைபெறும். மேலும், திருப்பரங்குன்றம், திருநீர் மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்தில் உள்ளகாசி விஸ்வநாதர் கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்திக் கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.‌ தவிர, கரூர் அய்யன் மலை‌ கோயில், சோளிங்கர் நரசிம்மர் பெருமாள் கோயிலில் நடந்து வரும் ரோப்கார் வசதி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.‌ இவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மருதமலையில் தானியங்கி லிப்ட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. சுவாமி மலையில் தானியங்கி லிப்ட் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, ரூ.3.60 கோடி செலவில் சுவாமி மலையில் தானியங்கி லிப்ட் அமைக்கப்படவுள்ளது. மேலும், மலை கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க முதல்வர் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் ஆய்வுகள் செய்து பணிகள் நடந்து வருகின்றன.

திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகளில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரலாற்றிலேயே திராவிட மாடல் ஆட்சியில் தான் இது போல் நடந்துள்ளது. மேலும், ரூ.5 ஆயிரத்து 135‌ கோடி மதிப்பிலான 5,335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சியில் பக்தர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ரூ.331 கோடியில் 745 கோயில்களில் திருப்பணிகள்.. 249 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள அமைச்சர் சேகர்பாபு!

அனுவாவி கோயிலில் ரோப் கார் மட்டுமின்றி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மலைப்பாதையில் இரண்டு பக்கமும் மின் வேலி அமைக்க சாத்தியக்கூறுகள் இருந்தால் அதுவும் அமைக்கப்படும்.

பக்தர்கள் வசதிகளுக்காக தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனே நிறைவேற்ற வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சராக அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆதீனங்கள் ஆட்சியாளர்களை தேடி சென்ற காலம்போயி, ஆட்சியாளர்கள் ஆதீனங்களை தேடி வருகின்றோம். பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள், நீங்கள் கேட்பதையும் தருவோம், கேட்காததையும் தருவோம். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல. இந்துக்களை பாதுகாகாக்கும், அரவணைக்கு கட்சி. அனைவரையும் பாதுகாக்கும் முதல்வராக நமது முதல்வர் திகழ்கின்றார் என்றார்.

”திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் சமமாகப் பார்க்கிறோம்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

Also Read: “பிரதமர் விமானம் இல்லாமல் கூட செல்வார்; அதானி இல்லாமல் செல்லமாட்டார்”: மோடியை கலாய்த்த அமைச்சர் உதயநிதி!