Tamilnadu
வாய் பேச முடியாத மகன்.. தண்ணீரில் விஷம் : குடும்பமே எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் மூழ்கிய கிராமம் !
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி என்ற பகுதியில் இந்திராநகரில் சிவராமகிருஷ்ணன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி பல வருடங்களுக்கு முன்னர் இறந்ததால், 2-வதாக வசந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிவராமகிருஷ்ணனுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் வெளியூரிலும், மற்றொரு மகன் திலக் என்பவர் சென்னையிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
திலக் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், இவருக்கும் மகேஷ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 6 வயதில் சாய் பிரசாந்த் என்ற மகன் உள்ளார். சிறுவனுக்கோ வாய் பேச முடியாத குறை இருந்துள்ளது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அடிக்கடி கூட்டி சென்றுள்ளனர். மேலும் சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறும் இருந்துள்ளது.
இதனால் குடும்பமே மன உளைச்சலில் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி மகனின் சிகிச்சைக்காக திலக் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். மேலும் 'ஆன்லைன் டிரேடிங்' வியாபாரத்திலும் திலக் பணத்தை இழந்துள்ளார். இதனால் திலக் மற்றும் அவரது மனைவி மேலும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில்தான் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொள்ள அனைவரும் எண்ணியுள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று தன்படி வீட்டிலிருந்த தாய், தந்தை, மகன் மற்றும் மனைவி அனைவருக்கும் திலக், தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து தாங்கள் தற்கொலை போவதாகவும், தனது சகோதரனுக்கு மெசேஜ் அனுப்பிய பின், திலக்கும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து பதறி போன வெளியூரில் இருக்கும் சகோதரன், திலக் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டாரை தொடர்பு கொண்டு பார்த்து வரும்படி கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் சென்று அங்கே பார்க்கையில், அனைவரும் மயக்க நிலையில் கீழே கிடந்தனர். மேலும் வசந்தா உயிர் மட்டும் ஊசலாடி கொண்டிருந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வசந்தாவை, உள்ளிட்ட அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன், திலக், மகேஸ்வரி, முதியவர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது வசந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தம் காரணமாக இன்ஜினியர் ஒருவர் மனைவி, தந்தை, மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
-
“பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு!” : முரசொலி தலையங்கம்!
-
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
“பாஜக ஒரு பாறாங்கள்.. அதை கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்தால்...” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
-
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!