Tamilnadu
”தமிழ்நாட்டில் திட்டமிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி”: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் திட்டமிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி செய்கிறார் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, " தன்னுடைய வேலையை தவிர பிற வேலைகளை மட்டுமே செய்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர்.
டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் உள்நோக்கம் என்ன?, ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு அரசு சார்பில் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இப்படி நடந்து கொள்வது ஏன்?
தமிழ்நாட்டுக்கு விரோதமான செயல்களை ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக இன்றைக்கு அனைவரும் சென்னை தினம் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் ஆளுநர் மெட்ராஸ் டே என வாழ்த்து சொல்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு என சொல்ல மறுத்தவர்தான் இவர். தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராகப் பாடத்திட்டங்கள் குறித்து பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் கடிதம் எழுதுகிறார்.
மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டிற்கு அனைத்து வகையிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியது. ஆனால் அ.தி.மு.கவினர் தான் பொறுப்பற்ற ரீதியில் உணவை வீணடித்துள்ளனர்.
நீட் குறித்து எடப்பாடி பழனிச்சாமி சொல்வது அவருக்கு அரசியல் அரிச்சுவடே தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. தி.மு.க ஆட்சிக் காலத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலிருந்தவரையும் சரி நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தமிழ்நாட்டிற்குள் நீட் நுழைந்தது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!