Tamilnadu
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர்.. தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தி.மு.க MP!
தி.மு.க துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நீலகிரியில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அவினாசியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கணியூர் சுங்கச்சாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதைப்பார்த்த ஆ. ராசா எம்.பி உடனே தனது காரை நிறுத்தி கீழே இறங்கிச் சென்றார்.
பின்னர் வாலிபரின் உடல்நலத்தைப் பார்த்து விட்டு ஆம்புலன்ஸ் வருவதற்காக தாமதிக்காமல் உடனே வாலிபரை தனது காரில் ஏற்றி அருகே இருந்த கோவை ராயல்கேர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தன்னுடன் வந்த மருத்துவர் கோகுல் என்பவரையும் வாலிபருடன் காரில் அனுப்பிவைத்தார்.
பிறகு வாலிபருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். விபத்தில் சிக்கியது, தனியார் நிறுவன ஊழியரான தமிழ் செல்வன் என்பதும் லாரி மோதியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த உதவி செய்த தி.மு.க எம்.பி ஆ.ராசாவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!