Tamilnadu
கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்.. 3 பேர் பலி: சென்னைக்கு வரும் வழியில் நடந்த விபத்து!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி உயர்மட்ட கால்வாய் மேம்பாலத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இறந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராமநாதபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் என தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மூன்று ஆண்களில் இரண்டு பேர் 30 வயதும் மற்றொருவருக்கு 50 வயதும் இருக்கும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!