Tamilnadu
கர்நாடகா To தமிழ்நாடு.. 2 டன் தக்காளியை லாரியோடு கடத்தி 2 லட்சத்துக்கு விற்ற தம்பதி.. சிக்கியது எப்படி ?
பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை அதிகரித்து விற்பனையாகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை விட ஒரு கிலோ தக்காளி அதிகமாக விற்கப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதோடு தக்காளிக்கு தங்கம் போல் சில விவசாயிகள் பாதுகாப்பு கொடுக்கின்றனர். உபியில் விவசாயி ஒருவர் தக்காளி விற்பனைக்காக பவுன்சர்களை நிற்க வைத்த சம்பவம் அரங்கேறியது. ஆந்திராவில் தக்காளி விற்று ஒரு மாதத்தில் ஒரு குடும்பம் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளது. அதோடு சகோதரர்கள் லட்சதீபத்தி ஆகியுள்ளனர்.
மேலும் தக்காளி அதிகம் விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த நபரை மர்ம நபர்கள் கொலை செய்த நிகழ்வும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தக்காளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில், தம்பதி ஒன்று 2 டன் தக்காளியை லாரியோடு கடத்தி சுமார் 2 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி மல்லேஷ். இவர் தன் நிலத்தில் விளைந்த 2 டன் தக்காளியை விற்பனைக்காக கோலார் மாவட்டத்திற்கு தனது சரக்கு லாரி ஒன்றில் எடுத்து வந்தார். அப்போது வாகனம் எலகங்கா அருகே ஹெப்பால் சாலையை தாண்டி சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பின்னே காரில் வந்த மர்ம கும்பல் லாரியை வழி மறித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி தக்காளி இருந்த லாரியை எடுத்துக்கொண்டு கர்நாடகாவை விட்டு புறப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மல்லேஷ் ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த அவர்கள் சிசிடிவி கேமரா உள்ளிட்டவையை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.
இதனிடையே சுமார் 2 லட்சம் மதிப்பிலான தக்காளியை லாரியோடு கடத்தி சென்ற கும்பல் தமிழ்நாட்டுக்கு வந்து தக்காளியை விற்றுள்ளனர். அதில் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை 5 பேர் கொண்ட கும்பல் சரி பாதியாக பிரித்து கொண்டனர். இதையடுத்து காலியான அந்த லாரியை மீண்டும் உரிய இடத்தில் வைக்க வேண்டும் என்பதால், கர்நாடக மாநில எல்லையில் விட்டுவிட்டு, நம்பர் பிளேட் இல்லாத காரில் திரும்பியுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சியில் தக்காளியை லாரியுடன் கடத்தி சென்ற கும்பலில் தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கர் (38) மற்றும் சிந்துஜா (36) தம்பதி பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தக்காளியை விற்று பணத்தை பங்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது. அதோடு இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், காலியாக இருந்த சரக்கு லாரியில் மீட்டனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களை சிறையில் அடைத்த போலீசார், அவர்களுடன் இருந்த மீதம் 3 பேரை தேடி வருகின்றனர். 2 டன் தக்காளியை லாரியோடு கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!