Tamilnadu
பெற்றோர்களே உஷார்.. வேடிக்கை பார்க்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப பலி!
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ். இவர் டீக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு நிதிஷ் என்ற 4 வயதில் சிறுவன் இருந்தான்.
இந்நிலையில் சிறுவன் நிதிஷ் வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்ப்பதற்காக பால்கனியின் கம்பி மீது ஏறி எட்டிப்பார்த்துள்ளான்.
அப்போது நிலை தடுமாறி சிறுவன் கீழே விழுந்துள்ளான். இதில் பலத்த காயம் அடைந்த நித்திஷ் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குச் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடிக்கை பார்க்கும் போது மாடியிலிருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!