Tamilnadu
பணம் வராததால் ஆத்திரம்.. ATM எந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கிய நபர்!
வேலூர் மாவட்டம், ஊசூர் பகுதியில் இண்டி கேஸ் ATM உள்ளது. இந்த ஏடிஎம்மிற்கு இதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஏந்திரத்திலிருந்து பணம் வரவில்லை.
மேலும் பலமுறை முயற்சி செய்து பார்த்துள்ளார். இருந்தும் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிலிருந்து கோடாரியை எடுத்து ATM ஆம் மையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் ATM ஏந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு உடனே வந்த போலிஸார் கந்தசாமியை மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணம் வராததால் ஏடிஎம் ஏந்திரத்தை அடித்து நொறுக்கியதாகக் கூறினார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!