Tamilnadu

சென்னையில் தண்ணீர் தேக்கம் இல்லை.. சீர் செய்யப்பட்ட போக்குவரத்து : துரித நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி!

சென்னையில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக நகரின் பல்வேறு தெருக்களில் தேங்கிய மழைநீர் அனைத்து உடனுக்குடன் வெளியேறி வடிந்து காணப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கையாக சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பருவமழையை அறிந்து சென்னை மாநகராட்சியின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துவங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

பொதுவாக சென்னையில் கனமழை பெய்யும் பட்சத்தில் சென்னையின் முக்கிய சாலைகள் தவிர்த்து, நகரின் பல்வேறு தெருக்களிலும் மழைநீர் தேங்கி நிரப்பதை கான முடியும். ஆனால், தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக நகரின் பல்வேறு தெருக்களில் நேங்கி இருக்கும் மழைநீர் அனைத்து உடனுக்குடன் வெளியேறி வடிந்து காணப்படுகிறது.

அதன்படி மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களான சென்னை தியாகராய நகரை சுற்றியுள்ள அபிபுல்லா சாலை, விஜயராகவா சாலை, ஜி.என்.செட்டி சாலை, நுங்கம்பாக்கம் ஜெமினி பிரிட்டிஷ் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி சாலைகளில் பயணிப்பதை காண முடிகிறது.

மேலும் சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களும் சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கையால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. இது மட்டுமன்றி நகரின் பல்வேறு சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்காமல் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணப்பட்டு வருகின்றன.

Also Read: “விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சரும், நானும் துணை நிற்போம்” : உற்சாகப்படுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி!