Tamilnadu
“அமலாக்கத்துறை கொடுத்த தொல்லையால் அமைச்சரின் உயிருக்கே ஆபத்து..” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி ஆவேசம்!
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் வீட்டில் நேற்று தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தினர் .
சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரை கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்போவதாகவும், தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அதிகாரிகள் அழைத்தனர்.
முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு மேலும் மன அழுத்தத்தையும் கொடுத்தது. இந்த நிலையில், அமைச்சர் செல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. இதனால் கதறி துடித்த அமைச்சரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மன அழுத்தம், டென்சன் என அமலாக்கத்துறையினரின் நடவடிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மயக்கம் ஏற்பட்டு, நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனிடையே தி.மு.க வழக்கறிஞர் வில்சன் எம்.பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு. அதுவும் திரும்ப பெறப்பட்டு, ஒரு சிலரின் மேல்முறையீட்டு காரணமாக மீண்டும் விசாரிக்கப்படுகிறது. விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. அப்படி இருந்தும் இவ்வளவு அவசர அவசரமாக விசாரணைக்கு வரவேண்டிய அவசியம் என்ன? விசாரணை என்ற பெயரில் தலைமைச் செயலகத்தில் நுழைந்து சீன் போட வேண்டிய தேவை என்ன?
அவர் அமைச்சர், அவருக்கு சம்மன் அனுப்பி முறையாக விசாரணைக்கு அழைக்க வேண்டியது தானே. அவரும் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக கூறுகிறார். அப்படி இருந்தும் கைது செய்ய வேண்டிய தேவை என்ன? அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. அதை அழிக்கவோ, வழக்கில் இருந்து தப்பிக்கவோ முயற்சி செய்யவில்லை. ஆனாலும் இப்படி தீவிரவாத தன்மையுடன் நடந்து கொண்டுள்ளனர்.
டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இப்போது தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் மிரட்ட தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒரு அமைச்சரை இந்த அளவுக்கு துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
2015ல் இருந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்குள் அமலாக்கத்துறை இந்த அளவுக்கு அவசரப்பட வேண்டிய தேவை என்ன? எனவே இது முழுக்க முழுக்க அரசியல் பின்புலம் கொண்டது. அதிகார துஷ்பிரயோகம் கொண்டது.
அமலாக்கத்துறை விசாரணை என்பது தீவிரவாத தன்மை கொண்டதாக இருப்பதை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அதே தீவிரவாத தன்மை கொண்டதாக, அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தான் இந்த விசாரணையும் நடந்துள்ளது.
அமலாக்கத்துறை விசாரணை என்பது தீவிரவாத தன்மை கொண்டதாக இருப்பதை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. அதே தீவிரவாத தன்மை கொண்டதாக தான் இந்த விசாரணையும் நடந்துள்ளது. அமலாக்கத்துறை கொடுத்த தொல்லை, இன்றைக்கு அமைச்சரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!