Tamilnadu
அதிமுக ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மற்றுமொரு அவலம்.. சிறு மழைக்கே இடிந்து விழுந்த மைதான கேலரி !
கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ள நிலையில், சில பணிகள் நடந்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தை அழகுபடுத்தும் நோக்கில் புதிய இருக்கைகள் கேலரிகள் மேற் கூரைகள் அமைக்கப்பட்டது. 14 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திறப்பு விழாவும் நடத்தப்பட்டு தற்போது அந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் பாளையங்கோட்டை பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் காற்று பலமாக வீசியதால் அதனைத் தாக்கு பிடிக்காமல் வ.உ.சி மைதானத்தின் இரண்டு கேலரிகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தது.
மதிய நேரம் என்பதால் யாரும் மைதானத்திற்குள் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து உடனடியாக சேதம் அடைந்த பகுதிகள் அப்புறப்படுத்தப்படும் புதிய மேற்கூரை அமைக்கப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே இருக்கக்கூடிய மேற்கூரைகள் உறுதித் தன்மை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை பொதுமக்கள் மைதானத்திற்கு வர நுழைய தடை விதிக்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார்.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!