Tamilnadu

சிக்கலில் எடப்பாடியின் பினாமி.. அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.. அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலிஸார் !

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக இருப்பவர் இளங்கோவன். சேலம் மாவட்டம் புத்திர கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த இவர், அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளரராக இருந்து வருகிறார். மேலும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருக்கிறார்.

இவர் கடந்த அதிமுக ஆட்சியில் நிழல் முதலமைச்சரை போல செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்பு போலிசார், புத்திரகவுண்டன் பாளையத்தில் உள்ள அவருடைய வீடு, மற்றும் அவருக்கு சொந்தமான 36 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் எம் ஐ டி கல்லூரி மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் என பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் 41 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, 34.28 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு செய்த ஆவணம், வெளிநாட்டு பணம் 5.5 லட்சம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ் விசாரணை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்த போலிசார், சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பபட்டது. அதுமட்டுமின்றி எழுத்துப்பூர்வமாக பதில் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பினாமியான இளங்கோவன் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் பினாமியான இளங்கோவனால் அவரே சிக்கலில் சிக்கியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக இருப்பவர் இளங்கோவன். சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இவர், அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளரராக இருந்து வருகிறார். மேலும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருக்கிறார்.

இவர் கடந்த அதிமுக ஆட்சியில் நிழல் முதலமைச்சரை போல செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்பு போலிசார், புத்திரகவுண்டன் பாளையத்தில் உள்ள அவருடைய வீடு, மற்றும் அவருக்கு சொந்தமான 36 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Also Read: தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் செல்லும் முதலமைச்சர் - பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் என்ன ?