Tamilnadu
23 விஷப் பாம்புகளை கடத்தி வந்த பெண்.. பதறியடித்து ஓடிய பயணிகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. பிறகு அந்த பயணியிடம் சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவரிடம் இருந்த இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகள் திறந்து பார்த்தபோது அதில் 22 விஷப் பாம்புகள் உயிருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து 23 பாம்புகளையும் அதிகாரிகள் மீட்டனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வனவிலங்கு உயிரினங்கள் குற்றப்பிரிவு அதிகாரிகளும் தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த பாம்புகள், ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காட்டுக்கு வசிக்கும் கொடிய விஷம் உடைய பாம்புகள் என்று தெரியவந்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியைக் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!