Tamilnadu

“காவல்துறை திட்டங்களிலும் கை வைத்த அதிமுக அரசு.. ரூ.74 கோடி எங்கே?” : வெளிவந்த பகீர் உண்மைகள்! #CAGReport

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான ஊழல்களும், முறைகேடுகள் நடைபெற்றதாக அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. மேலும், ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க-வின் முறைகேடுகள் வெளிகொண்டுவந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க அறிவித்திருந்தது.

அதன்படி, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India) அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அ.தி.மு.க-வின் பல்வேறு முறைகேடுகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒன்றிய அரசு விதிகளுக்கு முரணாக, டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதும், ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பித்ததும், நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே சிலர் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் கடந்த 2016 - 2021 காலக்கட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50.28 கோடி முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், இது மேலும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி துறையான காவல் துறையை நவீனப் படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் ரூ.14.37 கோடி வீண் செலவினமும், இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.74.03 கோடி பயன்படுத்தவே படவில்லை என்பதும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத்தலைவரின் அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.

மெகா சிட்டி போலிசிங் (Mega City Policing - MCP) என்பது காவல்துறை நவீன மயமாக்கலின் ஒரு துணை திட்டம் ஆகும். இத்திட்டமானது தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2012 ஆண்டு‌ தொடங்கப்பட்டது.

60 சதவிகிதம் ஒன்றைய அரசும் 40சதவிகிதம் மாநில அரசும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.மாநகரங்களிலுள்ள காவல் துறையில் கட்டுப்பாட்டு அறைகளை நவீனமாயாமாக்குதல், சென்னையில் கண்காணிப்பு கேமரா நிறுவுதல் ஆகியவற்றை செயல்படுத்துவது, அதேபோல திருச்சியில் ஏ.பி.சி.ஓ திட்டத்திற்கான வடிவமைப்பு, வழங்குதல், சோதனை செய்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளுதல் உட்பட அடிப்படை உள் கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

இத்தகைய காவல்துறை நவீனமயமாக்கல் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட காலதாமதம் ஏற்பட்டதால், அலைக்கற்றை கட்டணமாக செலவிடப்பட்ட ரூ.14.37 கோடி வீண் செலவீனம் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் திருச்சி திட்டங்களின் இலக்குகளை அடைய முடியாமல் போனதுடன் இந்திய அரசு நிதி ரூ. 74.03 கோடியை பயன்படுத்த இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

காலதாமதம் மற்றும் நிலவிய சிக்கல்களை அரசு தீர்க்க தவறியதால் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் மாநகரக்காக கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களுக்கான அலைக்கற்றை கட்டணங்களுக்காக ஒன்றிய அரசு விடுவித்த 29 கோடியே 49 லட்சத்தில், 14 கோடியே 37 லட்ச ரூபாய் செலவிடப்பட்டதுடன் மீதமான மீதமுள்ள 15 கோடியே 12 லட்சம் ரூபாய் செயல்படுத்தப்படவில்லை.

அதேபோல சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நவீனமயமாக்குவதற்கும் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசு 98 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒப்படைப்பு செய்து 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தபுள்ளிகளை கோரியது.

இருப்பினும் கொள்முதல் நோக்கத்தில் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பம் மற்றும் கணிசமான வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. அதோடு, கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்ட ஒப்புதல் இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆனால் 58 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கான பயன்பாட்டு சான்றிதழானது செலவழிக்கப்படாமலேயே வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் நடந்த நிர்வாக திறன் சி.ஏ.சி அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய அ.தி.மு.க முக்கிய புள்ளிகள் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியில் PM வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50.28 கோடி முறைகேடு”: CAG வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்!