Tamilnadu
பெற்றோர்களே எச்சரிக்கை ! - விபரீதமான விளையாட்டு.. இட்லி தட்டு ஓட்டைக்குள் சிக்கிய சிறுமியின் விரல் !
கன்னியாகுமரியில் அமைந்துள்ள லூர்து மாதா தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கிய செல்வியஸ். இவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஜாபி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி வழக்கமாக எதையாவது வைத்து விளையாடி வந்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று சிறுமி, சமயலறையில் இருக்கும் இட்லி தட்டை வைத்து விளையாடியுள்ளார்.
அப்போது அவர் அதில் இருக்கும் ஓட்டையில் தனது விரலை விட்டு, பின்னர் அதனை வெளியே எடுத்து விளையாடியுள்ளார். அந்த வகையில் இட்லி தட்டுக்குள் விரலை விட்ட சிறுமி, அதனை எடுக்க முயன்றபோது வரவில்லை. இதனால் பெரும் பதற்றப்பட்ட சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதனை கேட்டு பதறிப்போன பெற்றோர், சிறுமியின் விரலை வெளியே எடுக்க முயன்றார். அப்படியும் அது தோல்வியிலேயே முடிந்தது.
உறவினர்கள் முயன்றும் வரவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் முதலில் விரலை எடுக்க முயன்றனர். அப்படியும் அது முடியவில்லை என்பதால் கட்டிங் பிளேடு மூலம் இட்லி தட்டை வெட்டினர். சிறிது சிறிதாக பொறுமையாக வெட்டி சில மணி நேர முயற்சிக்கு பிறகு சிறுமியின் விரலை பத்திரமாக மீட்டனர்.
இதனிடையே சிறுமியின் விரல் உள்ளே சிக்கி கொண்டதில் வலியால் அலறி துடித்தார். இதனை கண்டு பெற்றோர் பெரும் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் இட்லி தட்டின் ஓட்டைக்குள் மாட்டிக்கொண்டிருந்த சிறுமியின் விரலை பத்திரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவுக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இதே போல் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் வீட்டில் இருக்கும் சமையல் பாத்திரங்களை வைத்து விளையாடும்போது அதன்மூலம் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பாத்திரத்தை தலையில் வைத்து விளையாடும்போது, அதில் மாட்டிக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுபோன்ற பொருட்களை விளையாட கொடுக்க கூடாது என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடித்தக்கது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!