Tamilnadu
"இஸ்லாமிய மக்களுக்கு என்றும் தி.மு.க துணை நிற்கும்".. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி வளாகத்தில், தி.மு.க மாநில சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, இஃப்தார் நோன்பினை திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியர்களுக்கும் காவலராக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அ.தி.மு.க ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட மிலாடி நபி விடுமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் வழிவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சிறுபான்மையினருக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.
அந்த வகையில் சிறுபான்மையினர் ஆணையத்தை அமைத்து, சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்ட பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிதிநிலை பெற்றுத் தந்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு என்றும் தி.மு.க துணை நிற்கும்.
கூட்டணி வேறு கொள்கை வேறு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கூறுகிறார். ஆனால் இங்குக் கூடியிருக்கும் கூட்டத்திற்குக் கூட்டணியும் ஒன்றுதான் கொள்கையும் ஒன்று தான்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளான வகுப்பு வாரிய சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பள்ளி வாசல், தர்காக்கள் உள்ளிட்ட வகுப்பு வாரிய சொத்துக்களைப் பழுது பார்க்க நிதி உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சா.மு நாசர், செஞ்சி மஸ்தான் , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!