Tamilnadu

பசுமை பள்ளிக்கூடத் திட்டம்.. சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சுற்றுச்சூழல்துறை உள்ளிட்ட சில துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யாநாதன் புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

>> காலநிலை மன்றங்கள் (Climate Clubs)

>> பசுமை நகரக் குறியீடு (Green Indexing of Cities)

>> காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் தீர்வுகளுக்கு நிதியுதவி

>> பசுமை பள்ளிக்கூடத் திட்டம் (Green School Programme)

>> மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது (Hon'ble CM's Waterbody Conservator Award)

>> தமிழ்நாடு குறுங்காடுகள் திட்டம் - காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக நாட்டு மரங்கள் கொண்ட 1000 குறுந்தகடுகள் உருவாக்குதல்

>> சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் அமைத்தல்

>> கழிவு உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு இடையே கழிவுகளை பரிமாறிக்கொள்வதற்கு இணையவழி கழிவு பரிமாற்ற தளம் (Waste Exchange Bureau) அமைத்தல்

>> சுழற்சி பொருளாதாரத்தில் (Circular Economy) குப்பை சேகரிப்பவர்களின் பங்களிப்பினை முதன்மைப்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்

>> கடல் வாழ் பல்லூரியினங்களை பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்தி தூக்கி எறியப்படும் மீன்பிடி வலைகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கான திட்டம் (TN Fishnet Initiatives)

>> மேம்படுத்தப்ட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களுக்கு, ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறுதல்

>> தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் எட்டு மேம்படுத்தப்ட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களில் நுண்ணயிரியல் பகுப்பாய்வு பிரிவு (Microbiology Analysis Wing) ஏற்படுத்துதல்

>> தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்துடன் இணைந்து மாசினால் பாஹிக்க்ப்பட்ட பகுதிகளின் மண் தர வரைபடம் (Soil Quality Mapping) தயாரித்தல்.

Also Read: “தஞ்சையில் கடற்பசு பாதுகாப்பு மையம்..” - வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் முக்கிய 7 அறிவிப்புகள் என்னென்ன ?