Tamilnadu
“தஞ்சையில் கடற்பசு பாதுகாப்பு மையம்..” - வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் முக்கிய 7 அறிவிப்புகள் என்னென்ன ?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சரான மதிவேந்தன் 7 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
1. திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
2. தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் 15.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
3. பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
4. ராம்சார் தளம் - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
5. ராம்சார் தளம் - கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
6. பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
7. அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!