Tamilnadu
ஆபாசப் படம் எடுத்து வெளியிடுவேன்.. மனைவியை மிரட்டிய கணவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி!
திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில், கடந்த 19. 03. 2018ம் தேதி பெண் ஒருவர் தன்னை ஆபாசமாகப் படம் பிடித்து 'சமூக ஊட்டங்களில் வெளியிடப்போவதாகப் கணவர் மிரட்டுவதாகப் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கின் புலன் விசாரணையை முடிந்து, கரூரைச் சேர்ந்த தேவ் ஆனந்த் என்பவரை போலிஸார் கைது செய்தனர். பின்னர் கடந்த 20.09.2018-ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி பாலாஜி தீர்ப்பு வழங்கினார்.
அதில் தேவ் ஆனந்த் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,20,000 இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என நீதிபதி பாலாஜி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?
-
சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!
-
கட்டடமாக மாற்றிய நம்பிக்கை : பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ - இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர் !