Tamilnadu
அரசு பேருந்து மீது வேகமாக மோதிய லோடு லாரி.. 3 பெண்கள் பரிதாப பலி - அதிகாலையில் நடந்த சோகம்!
தொண்டியிலிருந்து சிவகங்கை மார்க்கமாக மதுரை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, திருமாஞ்சோலை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஜல்லி ஏற்றி வந்த லாரி, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிர் இழந்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டனர். மேலும் சம்பவ இடத்திலே ஆர்.எஸ் மங்கலம் கீழக்கோட்டையை சேர்ந்த 60 வயது மூதாட்டி திருப்பதி, ராகினிபட்டி கங்கா(45), ராகிண பட்டியை சேர்ந்த கங்கா (3) பெண்கள் பலியானார்கள். அரசு பேருந்து ஓட்டுனர் ஈஸ்வரன் சிவகங்கை சேர்ந்த சந்திரன் வெங்கடேசன் நாட்டரசன் திவ்யா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.செல்வராஜ் உள்ளிட்ட போலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று பேர் பலியானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன்ரெட்டி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
இறந்த பெண்களின் உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்தை ஈஸ்வரன் என்ற ஓட்டுநரும் லாரியை பாலமுருகன் என்ற ஓட்டுநரும் ஒட்டிவந்த போது விபத்து நடந்ததுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து சிவகங்கை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!