Tamilnadu
”காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்” .. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் தான். முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கலைஞர். நிலம் கையகப்படுத்திய பிறகு கால்வாய் வெட்ட எந்த நடவடிக்கையையும் அ.தி.மு.க எடுக்கவில்லை.
தி.மு.க ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும். கால்வாய் வெட்டும் பணிகளுக்கு ரூ.177.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 64% பணிகள் முடிவடைந்துள்ளன. கால்வாய் வெட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டில் கால்வாய் வெட்டும் பணிக்காக ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!