Tamilnadu
’உன்ன மறக்க முடியல அப்பா’.. தந்தை இறந்த இரண்டே மாதத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு!
சென்னை செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது மகள் கீர்த்தி யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கிரிமினாலஜி படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை கீர்த்தியின் தாய் வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்கியுள்ளார்.
இதனை அடுத்து இவரை வழக்கமாகக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் இவரது நண்பர் சாம் குமார் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தோழி கீர்த்தி தூக்கில் தொங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு அங்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த இரண்டே மாதத்தில் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!