Tamilnadu
மாமியாரிடம் பாலியல் அத்துமீறல்.. கணவன் மீது மிளகாய்ப்பொடி கலந்த சுடுதண்ணீர் ஊற்றிய மனைவி!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வராஜ். இவரது மனைவி டயானா மேரி. அவரின் தாய் இன்னாசியம்மாள் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் குடித்து விட்டு மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை மனைவியும், அவரது தந்தையும் பல முறை கண்டித்து அவர் தொடர்ந்து இப்படியே நடந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 5ம் தேதி மாமியாரிடம் அத்துமீறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் மற்றும் மனைவி இருவரும் சுடுதண்ணீரில் மிளகாய்ப் பொடியைக் கலந்து அந்த நீரை செல்வராஜ் உடல் மீது ஊற்றியுள்ளது.
பின்னர் உடல் வெந்த நிலையில் செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை திருத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் மனைவி மேரி மற்றும் மாமியார் இன்னாசி அம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கணவனை மனைவி சுடுதண்ணீர் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!