Tamilnadu
பிறந்த நாளே இறந்த நாளான சோகம்.. 2 நண்பர்கள் பலி: கண்ணீரில் குடும்பம்!
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் அவரது கல்லூரி நன்பவர்கள் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அன்படி ரஞ்சித் வீட்டு அருகே இருக்கும் நண்பர்கள் சுந்தர் மற்றும் கவுதம் ஆகிய இருவர் அவரை கல்லூரியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றனர்.
பின்னர் ரஞ்சித்தை அழைத்துக் கொண்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் மூன்று பேரையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் மற்றும் கவுதம் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் சுந்தர் கவலைக்கிடமான நிலையில் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் அன்றே ரஞ்சித் குமாரும் அவரது நண்பர் கவுதமும் உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
-
“3 மாதத்தில் முதலமைச்சருக்கு வந்த பயம்.. சுதந்திர தின உரையா இது?” : வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!